அரும்புகள்

இயேசு பிரகாசிக்கிறார் அரும்புகள்
Go to fullsize image

அன்பு செல்வங்களே, 

இயேசு பிரகாசிக்கிறார் அரும்புகள் நீங்கள் சிறு வயதில் இருந்தே நல்லொழுக்கங்களை கற்றுக்கொண்டு தேவ அன்பில் வளர உதவும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. வேதவசனங்களை கற்றுக்கொண்டு, நீங்கள் ஜெபிக்கும் போது உங்களுக்கே தெரியாமல் மறைந்திருக்கும் திறமைகளை தேவன் உங்களுக்கு வெளிபடுத்துவார்.

நீங்கள் உங்கள் சபையில் நீங்கள் பங்கு கொண்ட வேத வசனம் ஒப்புவித்தல், நடனம், நாடகம், வாத்திய கருவிகள் வாசித்தல் மற்றும் வினா விடை நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஒளிப்பதிவுகள் இந்த இணையத்தளத்தில் ஒளிபரப்பப்படும்.

மாதம் ஒரு முறை நீங்கள் எழுதிய (வேதம் சார்ந்த) கதைகள், வரைந்த ஓவியங்கள், பாடிய பாடல்கள்(ஆராதனை) மற்றும் தேவசெய்தியுடன் இயேசு பிரகாசிக்கிறார் அரும்புகள் வெளிவரவிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பு உங்களுக்கு தரப்படும். அந்த தலைப்பில் நீங்கள் ஓவியங்கள் வரைந்து அனுப்பலாம், கதைகள் எழுதலாம், சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் காத்திருக்கிறது. உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்....

இயேசு பிரகாசிக்கிறார் அரும்புகள் இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...